இடம் : ஏற்காடு மலைப்பகுதி ரோடு
நாள் : 14 ஆகஸ்ட் 2016 11.00 pm
நான் நிஷா, பிரெண்ட்ஸோட ஏற்காடு trip வந்தோம், வந்த இடத்துல வாய மூடி ட்டு இருக்காம ஒரு சின்ன பந்தயம். பந்தயம் என்னனா 1 மணி நேரம் ஏற்காடு மலைப்பகுதி ரோட்ல தனியா நிற்கணும். என் பிரெண்ட்ஸ் என்னை இங்க இறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க, பயத்தை வெளிய காட் டாம இறங்கிட்டேன். ஆனா இப்போ கொ ஞ்சம் பயமாவும், அதிகம் குளிராவும் இருக்கு.
நான் கொஞ்சம் மறைவான இடமா பார் த்து நின்னுக்கிட்டேன், ஏன்னா நி றைய வண்டிகள் என்னை கடந்து போகும்போது என்னை அறியாம ஒரு பயம், நானும் ஒரு பெ ண் தானே. திடீர்ன்னு ஒரு கார், 20 அடிக்கு முன்னாடி சர்ர்ர்ருன் னு வந்து நின்னுச்சு, ஒருத்தன் கையில ஒரு பீர் பாட்டிலும், வா யில ஒரு சிகரெட்டோட இறங்கினான். அவன் வந்த கார் அவனை விட்டுட்டு கிளம் பிடுச்சி. ரோட்டோரம் இருந்த ஒரு சின்ன திண்ணைல உட்கா ர்ந்து அடுத்த சிகெரட்டை பத்தவெ ச்சான். எனக்கும் அவனுக்கும் 10 அடி தான் இடைவெளி இருக்கும்.நான் கொஞ்சம் மறைவா நிக்கறதால அவனுக்கு என்னை தெரியவாய்ப்புயில்லை, ஆனா அவன் எனக்கு clear'ah தெரிஞ்சான். எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமா கடந்துச்சு.
திடீர்ன்னு அவன் பாட்டிலை அங்கயே வெச்சிட்டு நான் இருந்த பக்கம் மெதுவா நடந்து வந்தான். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல, ஒருவேளை அவன் என்ன பார்த்துட்டானோ.? நான் இன்னும் கொஞ்சம் பின்னால போய் ஒரு பெரிய மரத்துக்கு பின்னால மறைஞ்சிக்கிட்டேன். இந்த குளிர்லயும் எனக்கு வேர்க் க ஆரம்பிச்சது. அவன் mobile எடு த்து யாருக்கோ பேசினான், வேற யாரையாச்சும் வரசொல்லறானோ, இன்னும் எத்தனை பே ர் இருக்காங்களோ, என் வாழ்க்கை அவ்ளோதான் முடிஞ்சிபோச்சின்னு நெனைச்சிகிட்டேன். சுதந்திரம் வாங்கி 70 வருஷம் ஆகியும் தனியா ஒரு பொ ண்ணு நைட் ரோட்ல நடக்க முடியல. இந்த காமவெ றி பிடிச்ச மிருகங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கறதுனு தெரியல. மணி 11.55, என் பந்தயம் நேரம் முடியப்போகுது இன்னும் என் பிரெ ண்ட்ஸை காணோம், அப்படியே மரத்து க்கு பின்னாடி சரிஞ்சி கடவுளை வேண்டிக்கிட்டு உட்கார்ந்துட்டேன்.
அதே நேரம் அதே இடம்..,
நான் ஷியாம், நானும் என் பிரெண் ட்ஸும் ஏற்காடு போயிட்டுயிருந்தோம். இன்னும் ஒரு மணி நேரத்துல போய் சேர்ந்துடுவோம். பசங்க ட்ரிப் பீர் இல்லாமயா..!! எனக் கு சரக்கு கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு. கார் லயே வாந்தி எடுத்துடுவேன்னு பயமுறுத்தினேன் , அவ்ளோதான் என்ன இறக்கிவிட்டுட் டு போய்ட்டாங்க படுபாவிங்க. கண்டி ப்பா திரும்பி வந்துருவாங்க, அவங்களுக்கு என் னை பயமுறுத்தறதுல அப்படி ஒரு ஆனந் தம். நல்லகுளிர், ஒரு தம் பத்தவெச்சே ன். ஒரு சின்ன திண்ணைல உட்கார்ந்து அந்த குளி ர அனுபவிச்சிட்டு இருந்தேன். திடீ ர்ன்னு நரி ஊளையிடற சத்தம், லைட் டா body shake ஆக ஆரம்பிச்சது. பயம் தெரி யாம இருக்க இன்னொரு தம் பத்தவெச்சேன். நே ரம் போகபோகவும் குளிரும் பயமும் ஜாஸ்தியாச்சு. சரக்கு ஜாஸ்தியா னதால வாந்தி வரமாதிரி இருந்தது, ரோட் டோரமா போலாம்னு போனா அங்க ஒரு உருவம் மாதிரி தெரிஞ்சுது. ஒரு மரத்துக் கு பின்னால ஒரே புகை மூட்டமா இரு ந்தது, லேசா ஒரு உருவம் கண்ணுக்கு தெரிஞ்சுது. இத்தனை நாள் பேய் பயம் இருந்துச் சு, ஆனா இப்போதான் முதல்முறையா பேய பார்த்தேன். எனக்கு என்ன பண்றதுனு தெரியலை, வேண்டாத சாமியில்லை.
ஒரு ஐடியா, போன் பண்ணி அவங்கள வரச்சொல்லி நாம கிளம்பிரலாம்னு. போன் அடிச்சேன் எவனும் எடுக்கல. சரி நம்ம life முடிஞ்சதுன்னு அப்படியே போதையில சரிஞ்சேன். மணி 12.00, நல்லவே ளை நான்வந்த கார் வந்துடுச்சு. ஆனா பின்னாடியே இன்னொரு காரும் நின்னுச்சி, எடு த்தேன் ஒரு ஓட்டம், அப்போவும் பேய் என்னை துறத்துறமாதிரியே ஒரு feel, கா ருக்குள்ள போன அப்புறம் தான் உயி ரே வந்துச்சு.அந்தஉருவம் எங்க காருக்கு பின்னாடி அப்படி யே மறைஞ்சி போச்சு.
No comments:
Post a Comment