தூள் படத்துல ஒரு சீன்ல சிறு வயது விவேக்கும் விக்ரமும் பேசிக்குவாங்க,
"என்னடா வசனமே புரியல.."
"வசனமடா முக்கியம், படத்தை பாருடா.."
அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த உலக சினிமா மோகம், வசனங்கள் புரியலானாலும் ஒரு படத்தை பார்த்து புரிஞ்சிக்குற feel இருக்கே அது போதும்.
எனக்கு இன்னுமும் ஞாபகம் இருக்கு நான் பார்த்த முதல் உலக சினிமா ஒரு ஈரானிய திரைப்படம் "Children of Heaven ". அந்த படத்துல அலியும் சஹ்ராவும் அண்ணன் தங்கையா வாழ்த்திருப்பாங்க. அந்த படத்தை பார்த்ததில் இருந்து என் தங்கச்சி மேல ஒரு தனி பாசம். எல்லா படங்களும் இப்படியான உணர்வை ஏற்படுத்தறதில்லை ஆனா சில படங்கள் எப்பொழுதும் close to Heart.
Turbo
Man, ஒரு commercial காமெடி படம் தான் ஆனா நான் அந்த படத்தை பார்த்த வயது, சூழ்நிலை ஒரு தந்தை மகனுக்காக செய்யும் சாகசங்கள் வியப்பூட்டியது. இப்படியாக தொடர்ந்தது என் உலக சினிமா பயணம்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், அவதார்- 2வை பற்றி நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஒருவன் மட்டும், அவதாரா, அப்படின்னா..? என்றான்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் குடுத்த வரம்,
Roommate அமைவதெல்லாம் அவன் அவன் செய்த வினை'ன்னு நெனைச்சிகிட்டு அவன் மேல உலக சினிமாவை படற விடலாம்ங்கற ஆசைல அவதாரை போட்டு காண்பிச்சோம்.
160 நிமிஷம் அமைதியா பார்த்திட்டு கடைசியா ஒண்ணு சொன்னான்.
"இந்த படம் ஏற்கனவே தமிழ்ல இருக்கே..!!!"
எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி, உலக சினிமா உலக சினிமான்னு உள்ளூர் சினிமாவை கவனிக்காம விட்டுட்டோமா..?
ஏன் என்றால் இது புதிது அல்ல, The Bourne Identity என்பது வெற்றி விழாவின் தழுவல் தான். அதுபோக ஆளவந்தானில் வந்த அனிமேஷன், Kill
Bill படத்திற்க்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது. அப்படியான ஒரு காவியத்தை மிஸ் பண்ணிட்டோமேன்னு ஒரு வருத்தம்.
அவனிடமே கேட்டு விட்டோம், "தமிழ்ல என்ன படம் மச்சி...?"
"வியட்நாம் காலனி"..
Mind Voice (அய்யோ ராமா, என்ன ஏன் இந்தமாதிரி கழிசடை பசங்களோடெல்லாம் கூட்டு சேர வைக்குற).
தொலைச்ச இடத்துல தானே தேட முடியும், வேற விழியில்லாம அவன்கிட்டயே விளக்கத்தை கேட்டோம்.
"எப்படிடா அவதாரையும், வியட்நாம் காலனியையும் Compare பண்ண ..?"
1. வில்லன்கள் ஹீரோவா ஒரு இடத்தை அபகரிக்க அனுப்பறாங்க .. இங்க pandora , அங்க காலனி.
2. இங்க jake க்கு Neytiri மேல love ஆயிடுது, அங்க பிரபுக்கு ஜூஜிலிப்பா மேல love ஆயிடும்.
3. கடைசியா jake உண்மை தெரிஞ்சி pandora மக்களுக்காக போராடறாரு, அங்கேயும் அதேதான்.".
அவன் சொல்லி முடிக்கவும் அங்கு மயான அமைதி,
" ராத்திரி K TV'ல சுள்ளான் போடறாங்க நான் கிளம்புறேன்"ன்னு சொல்லிட்டு அசால்ட்டா போய்ட்டான்.
என் உலக சினிமா பயணம் வழி தெரியாமல் முட்டு சந்தில மாட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு அந்த feeling...
No comments:
Post a Comment