Sunday, 20 November 2016

காதல் வயப்பட்டேன்


காதல் வயப்பட்டேன்


#SivasRoughNote
#Wanderersகிறுக்கல்கள்
#காதல்_வயபட்டேன்
#Marriage
#LovehasNoEndCard

காதல் வயப்பட்டேன்

அனைத்து பயணங்களும் ஒன்று போல் அமைவதில்லை, அதே விமானம் அதே இலக்கு ஆனாலும் இந்த பயணம் சற்று சிறப்புதான்.

சாங்கி சர்வதேச விமான நிலையம் பொழுதை போக்க ஆயிரம் வழி இருந்தாலும் எனக்கு பொழுது போகவில்லை. ஏனோ விமான நிலையமே slow motion'ல் பணி புரிவது போன்றொரு feeling. ஒரு வழியாக விமானத்தை வந்தடையும் போது 10:30pm. இன்று என்னோடு சேர்ந்து சில பல பட்டாம்பூச்சிகளும் பறந்தன என் வயிற்றில்.

கோவை வந்தடைய 12:00am விடிந்தால் பெண் பார்க்கும் படலம், ஆகையால் என் நெருங்கிய, தூர & மிக தூர என அனைத்து உறவினர்களும் ஏர்போர்ட்டில் என்னை வரவேற்க காத்துருந்தனர். இது என்னை மேலும் மெர்சலாக்கியது. அவர்களது விசாரிப்புகள் எதுவும் என் காதில் விழவில்லை, ஒரு வழியாக வீடு வந்து சேர்த்தோம். என் அறைக்கு வந்து தாளிட்டு கொண்டு படுக்கையில் சரிந்தேன். இது ஒரு புது அனுபவம் அப்பா அம்மா அனுமதியோடு ஒரு பெண்ணை சைட் அடிக்க போவது. அவள் அங்கே என்ன செய்து கொண்டிருப்பாள் என நினைத்துக்கொண்டே  கண் அயர்ந்தேன்.

மறுநாள் கோயிலுக்குள் நுழைத்தவுடன் அவளை என் கண்கள் தேட ஆரம்பித்தது, எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும் என்ற பழமொழி மீது எனக்கு அப்பொழுது நம்பிக்கையில்லை. என் கண்கள் அவளை அடைந்தன, என் பார்வையை அவள் மீதிருந்து விலக்க மனமில்லை. இதனால் வரை ஒரு பெண்ணை நான் இப்படி பார்த்ததில்லை.

எனக்காக இறங்கிய தேவதை போல் என் கண் முன்னே தெரிந்தால், அவள் கையைப்பற்றி அன்றே என்னோடு அழைத்து போக ஆசை, ஆனாலும் அது சாத்தியமில்லை. காதலில் தொடங்கி கல்யாணத்தில் முடியும் என்பார்கள், எனக்கு கல்யாணத்தில் தொடங்கி முடிவில்லா காதலை நோக்கி பயணப்பட தயாரானேன்.

அன்று நான் காதல் வயப்பட்டேன்.

சில வருடங்கள் கழித்து, அழகிய மாலை நேரம் இருவரும் பால்கனியில் அமர்ந்துஇருந்தோம் எப்பொழுது வேண்டுமென்றாலும் மழை வரலாம் என்பது போன்ற வானிலை. யாழினி, ஒரு கப் காபி கிடைக்குமா என்றேன் நிமிடங்களில் கை சேர்ந்தது. மெல்லிய சாரல், சூடான காபி, சுவையான மனைவி அனைத்தும் என் வசமிருக்க, ஒரு BGM பாடலுக்காக மனம் ரஹ்மானையும், தாமரையும் மனம் தேடி கொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு கேள்வி தோன்றியது, சில கேள்விகள் பதிலுக்காக இருக்கும், ஒரு சில கேள்விகள் பதில் கேள்விக்காக இருக்கும். இது இரண்டாம் வகைப்படும்.

"யாழினி, நீ யாரையாச்சும் Love பண்ணிருக்கிய ?"

"இல்லை, நீங்க?"

"Love பண்ணிக்கிட்டு இருக்கேன்... " என்று ஒரு மெல்லிய புன்னகையில் கூற, அடுத்த கணம் என் மார்பில் முகம் புதைத்தாள்...

Saturday, 20 August 2016

2D



இடம் : ஏற்காடு மலைப்பகுதி ரோடு
நாள் : 14 ஆகஸ்ட் 2016 11.00 pm

நான் நிஷா, பிரெண்ட்ஸோட ஏற்காடு trip வந்தோம், வந்த இடத்துல வாய மூடிட்டு இருக்காம ஒரு சின்ன பந்தயம். பந்தயம் என்னனா 1 மணி நேரம் ஏற்காடு மலைப்பகுதி ரோட்ல தனியா நிற்கணும். என் பிரெண்ட்ஸ் என்னை இங்க இறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க, பயத்தை வெளிய காட்டாம இறங்கிட்டேன். ஆனா இப்போ கொஞ்சம் பயமாவும், அதிகம் குளிராவும் இருக்கு.
நான் கொஞ்சம் மறைவான இடமா பார்த்து நின்னுக்கிட்டேன், ஏன்னா நிறைய வண்டிகள் என்னை கடந்து போகும்போது என்னை அறியாம ஒரு பயம், நானும் ஒரு பெண் தானே. திடீர்ன்னு ஒரு கார், 20 அடிக்கு முன்னாடி சர்ர்ர்ருன்னு வந்து நின்னுச்சு, ஒருத்தன் கையில ஒரு பீர் பாட்டிலும், வாயில  ஒரு சிகரெட்டோட இறங்கினான். அவன் வந்த கார் அவனை விட்டுட்டு கிளம்பிடுச்சி. ரோட்டோரம் இருந்த ஒரு சின்ன திண்ணைல உட்கார்ந்து அடுத்த சிகெரட்டை பத்தவெச்சான். எனக்கும் அவனுக்கும் 10 அடி தான் இடைவெளி இருக்கும்.நான் கொஞ்சம் மறைவா நிக்கறதால அவனுக்கு என்னை தெரியவாய்ப்புயில்லை, ஆனா அவன் எனக்கு clear'ah தெரிஞ்சான். எனக்கு ஒவ்வொரு  நிமிஷமும் ஒரு யுகமா கடந்துச்சு.
திடீர்ன்னு அவன் பாட்டிலை அங்கயே வெச்சிட்டு நான் இருந்த பக்கம் மெதுவா நடந்து வந்தான். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல, ஒருவேளை  அவன் என்ன பார்த்துட்டானோ.?  நான் இன்னும் கொஞ்சம் பின்னால போய் ஒரு பெரிய மரத்துக்கு பின்னால மறைஞ்சிக்கிட்டேன். இந்த குளிர்லயும் எனக்கு வேர்க்க ஆரம்பிச்சது. அவன்  mobile எடுத்து யாருக்கோ பேசினான், வேற யாரையாச்சும் வரசொல்லறானோ, இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ, என் வாழ்க்கை அவ்ளோதான் முடிஞ்சிபோச்சின்னு நெனைச்சிகிட்டேன். சுதந்திரம் வாங்கி 70 வருஷம் ஆகியும் தனியா ஒரு பொண்ணு நைட் ரோட்ல நடக்க முடியல. இந்த காமவெறி பிடிச்ச மிருகங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கறதுனு தெரியல. மணி 11.55, என் பந்தயம் நேரம் முடியப்போகுது இன்னும் என் பிரெண்ட்ஸை காணோம், அப்படியே மரத்துக்கு பின்னாடி சரிஞ்சி கடவுளை வேண்டிக்கிட்டு உட்கார்ந்துட்டேன்.

அதே நேரம் அதே இடம்..,

நான் ஷியாம், நானும் என் பிரெண்ட்ஸும் ஏற்காடு போயிட்டுயிருந்தோம். இன்னும் ஒரு மணி நேரத்துல போய் சேர்ந்துடுவோம்.  பசங்க ட்ரிப் பீர் இல்லாமயா..!! எனக்கு சரக்கு கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு. கார்லயே  வாந்தி எடுத்துடுவேன்னு பயமுறுத்தினேன், அவ்ளோதான் என்ன இறக்கிவிட்டுட்டு போய்ட்டாங்க படுபாவிங்க. கண்டிப்பா  திரும்பி வந்துருவாங்க, அவங்களுக்கு என்னை பயமுறுத்தறதுல அப்படி ஒரு ஆனந்தம். நல்லகுளிர், ஒரு தம் பத்தவெச்சேன். ஒரு  சின்ன திண்ணைல உட்கார்ந்து அந்த குளிர அனுபவிச்சிட்டு இருந்தேன். திடீர்ன்னு நரி ஊளையிடற சத்தம், லைட்டா body shake ஆக ஆரம்பிச்சது. பயம் தெரியாம இருக்க இன்னொரு தம் பத்தவெச்சேன். நேரம்  போகபோகவும் குளிரும் பயமும்  ஜாஸ்தியாச்சு. சரக்கு ஜாஸ்தியானதால வாந்தி வரமாதிரி இருந்தது, ரோட்டோரமா போலாம்னு போனா அங்க ஒரு உருவம்  மாதிரி தெரிஞ்சுது. ஒரு மரத்துக்கு பின்னால ஒரே புகை மூட்டமா இருந்தது, லேசா ஒரு உருவம் கண்ணுக்கு தெரிஞ்சுது. இத்தனை நாள் பேய் பயம் இருந்துச்சு, ஆனா இப்போதான் முதல்முறையா பேய பார்த்தேன். எனக்கு என்ன பண்றதுனு தெரியலை, வேண்டாத சாமியில்லை.
ஒரு ஐடியா, போன் பண்ணி அவங்கள வரச்சொல்லி நாம கிளம்பிரலாம்னு.போன் அடிச்சேன் எவனும் எடுக்கல. சரி நம்ம life முடிஞ்சதுன்னு அப்படியே போதையில சரிஞ்சேன். மணி 12.00,  நல்லவேளை நான்வந்த கார் வந்துடுச்சு. ஆனா பின்னாடியே இன்னொரு காரும் நின்னுச்சி, எடுத்தேன் ஒரு ஓட்டம், அப்போவும் பேய் என்னை துறத்துறமாதிரியே ஒரு feel,   காருக்குள்ள போன அப்புறம் தான் உயிரே வந்துச்சு.அந்தஉருவம் எங்க காருக்கு பின்னாடி அப்படியே மறைஞ்சி போச்சு.


Sunday, 14 August 2016

ஒலக சினிமா...

தூள் படத்துல ஒரு சீன்ல சிறு வயது விவேக்கும் விக்ரமும் பேசிக்குவாங்க,

 "என்னடா வசனமே புரியல.."
"வசனமடா முக்கியம், படத்தை பாருடா.."

அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த உலக சினிமா மோகம், வசனங்கள் புரியலானாலும் ஒரு படத்தை பார்த்து புரிஞ்சிக்குற feel இருக்கே அது போதும்.

எனக்கு இன்னுமும் ஞாபகம் இருக்கு நான் பார்த்த முதல் உலக சினிமா ஒரு ஈரானிய திரைப்படம் "Children of Heaven ". அந்த படத்துல அலியும் சஹ்ராவும் அண்ணன் தங்கையா வாழ்த்திருப்பாங்க. அந்த படத்தை பார்த்ததில் இருந்து என் தங்கச்சி மேல ஒரு தனி பாசம். எல்லா படங்களும் இப்படியான உணர்வை ஏற்படுத்தறதில்லை ஆனா சில படங்கள் எப்பொழுதும் close to Heart. 

Turbo Man, ஒரு commercial காமெடி படம் தான் ஆனா நான் அந்த படத்தை பார்த்த வயது, சூழ்நிலை ஒரு தந்தை மகனுக்காக செய்யும் சாகசங்கள் வியப்பூட்டியது.  இப்படியாக தொடர்ந்தது என் உலக சினிமா பயணம்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், அவதார்- 2வை பற்றி நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஒருவன் மட்டும், அவதாரா, அப்படின்னா..? என்றான்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் குடுத்த வரம்,
Roommate அமைவதெல்லாம் அவன் அவன் செய்த வினை'ன்னு நெனைச்சிகிட்டு அவன் மேல உலக சினிமாவை படற விடலாம்ங்கற ஆசைல அவதாரை போட்டு காண்பிச்சோம். 
160 நிமிஷம் அமைதியா பார்த்திட்டு கடைசியா ஒண்ணு சொன்னான்.

"இந்த படம் ஏற்கனவே தமிழ்ல இருக்கே..!!!"

எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி, உலக சினிமா உலக சினிமான்னு உள்ளூர் சினிமாவை கவனிக்காம விட்டுட்டோமா..?
ஏன் என்றால் இது புதிது அல்ல, The Bourne Identity என்பது வெற்றி விழாவின் தழுவல் தான். அதுபோக ஆளவந்தானில் வந்த அனிமேஷன், Kill Bill படத்திற்க்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது. அப்படியான ஒரு காவியத்தை மிஸ் பண்ணிட்டோமேன்னு ஒரு வருத்தம். 

அவனிடமே கேட்டு விட்டோம், "தமிழ்ல என்ன படம் மச்சி...?"
"வியட்நாம் காலனி".. 
  Mind Voice (அய்யோ ராமா, என்ன ஏன் இந்தமாதிரி கழிசடை பசங்களோடெல்லாம் கூட்டு சேர வைக்குற).
தொலைச்ச இடத்துல தானே தேட முடியும், வேற விழியில்லாம அவன்கிட்டயே விளக்கத்தை கேட்டோம்.
"எப்படிடா அவதாரையும், வியட்நாம் காலனியையும் Compare பண்ண ..?"

1. வில்லன்கள் ஹீரோவா ஒரு இடத்தை அபகரிக்க அனுப்பறாங்க ..  இங்க pandora , அங்க காலனி.
2. இங்க jake க்கு Neytiri மேல love ஆயிடுது, அங்க பிரபுக்கு ஜூஜிலிப்பா மேல love ஆயிடும்.
3. கடைசியா jake உண்மை தெரிஞ்சி pandora மக்களுக்காக போராடறாரு, அங்கேயும் அதேதான்.".

அவன் சொல்லி முடிக்கவும் அங்கு மயான அமைதி,
" ராத்திரி K TV'ல சுள்ளான் போடறாங்க நான் கிளம்புறேன்"ன்னு சொல்லிட்டு அசால்ட்டா போய்ட்டான். 

என் உலக சினிமா பயணம் வழி தெரியாமல் முட்டு சந்தில மாட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு அந்த feeling...