காதல் வயப்பட்டேன்
#SivasRoughNote
#Wanderersகிறுக்கல்கள்
#காதல்_வயபட்டேன்
#Marriage
#LovehasNoEndCard
காதல் வயப்பட்டேன்
அனைத்து பயணங்களும் ஒன்று போல் அமைவதில்லை, அதே விமானம் அதே இலக்கு ஆனாலும் இந்த பயணம் சற்று சிறப்புதான்.
சாங்கி சர்வதேச விமான நிலையம் பொழுதை போக்க ஆயிரம் வழி இருந்தாலும் எனக்கு பொழுது போகவில்லை. ஏனோ விமான நிலையமே slow motion'ல் பணி புரிவது போன்றொரு feeling. ஒரு வழியாக விமானத்தை வந்தடையும் போது 10:30pm. இன்று என்னோடு சேர்ந்து சில பல பட்டாம்பூச்சிகளும் பறந்தன என் வயிற்றில்.
கோவை வந்தடைய 12:00am விடிந்தால் பெண் பார்க்கும் படலம், ஆகையால் என் நெருங்கிய, தூர & மிக தூர என அனைத்து உறவினர்களும் ஏர்போர்ட்டில் என்னை வரவேற்க காத்துருந்தனர். இது என்னை மேலும் மெர்சலாக்கியது. அவர்களது விசாரிப்புகள் எதுவும் என் காதில் விழவில்லை, ஒரு வழியாக வீடு வந்து சேர்த்தோம். என் அறைக்கு வந்து தாளிட்டு கொண்டு படுக்கையில் சரிந்தேன். இது ஒரு புது அனுபவம் அப்பா அம்மா அனுமதியோடு ஒரு பெண்ணை சைட் அடிக்க போவது. அவள் அங்கே என்ன செய்து கொண்டிருப்பாள் என நினைத்துக்கொண்டே கண் அயர்ந்தேன்.
மறுநாள் கோயிலுக்குள் நுழைத்தவுடன் அவளை என் கண்கள் தேட ஆரம்பித்தது, எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும் என்ற பழமொழி மீது எனக்கு அப்பொழுது நம்பிக்கையில்லை. என் கண்கள் அவளை அடைந்தன, என் பார்வையை அவள் மீதிருந்து விலக்க மனமில்லை. இதனால் வரை ஒரு பெண்ணை நான் இப்படி பார்த்ததில்லை.
எனக்காக இறங்கிய தேவதை போல் என் கண் முன்னே தெரிந்தால், அவள் கையைப்பற்றி அன்றே என்னோடு அழைத்து போக ஆசை, ஆனாலும் அது சாத்தியமில்லை. காதலில் தொடங்கி கல்யாணத்தில் முடியும் என்பார்கள், எனக்கு கல்யாணத்தில் தொடங்கி முடிவில்லா காதலை நோக்கி பயணப்பட தயாரானேன்.
அன்று நான் காதல் வயப்பட்டேன்.
சில வருடங்கள் கழித்து, அழகிய மாலை நேரம் இருவரும் பால்கனியில் அமர்ந்துஇருந்தோம் எப்பொழுது வேண்டுமென்றாலும் மழை வரலாம் என்பது போன்ற வானிலை. யாழினி, ஒரு கப் காபி கிடைக்குமா என்றேன் நிமிடங்களில் கை சேர்ந்தது. மெல்லிய சாரல், சூடான காபி, சுவையான மனைவி அனைத்தும் என் வசமிருக்க, ஒரு BGM பாடலுக்காக மனம் ரஹ்மானையும், தாமரையும் மனம் தேடி கொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு கேள்வி தோன்றியது, சில கேள்விகள் பதிலுக்காக இருக்கும், ஒரு சில கேள்விகள் பதில் கேள்விக்காக இருக்கும். இது இரண்டாம் வகைப்படும்.
"யாழினி, நீ யாரையாச்சும் Love பண்ணிருக்கிய ?"
"இல்லை, நீங்க?"
"Love பண்ணிக்கிட்டு இருக்கேன்... " என்று ஒரு மெல்லிய புன்னகையில் கூற, அடுத்த கணம் என் மார்பில் முகம் புதைத்தாள்...
No comments:
Post a Comment