Saturday, 29 May 2021

வலை

 

 

1.  TASMAC என்கிற சாராயக்கடை


நானும் ஆர்த்தியும் காலை நாலு மணி கோவை பஸ் ஸ்டாண்ட்ல ஒரு ஆட்டோ பின்னாடி மறைஞ்சிட்டு இருந்தோம். எங்களை நாலு பேர் துரத்திட்டு இருக்காங்க, அவங்க கிட்ட நான் மாட்டினாலும் பரவாயில்லை ஆனா ஆர்த்தியை பஸ் ஏற்றி விட்றணும். நாங்க இருந்த இடம் நல்ல இருட்டு அதுவும் சாக்கடை பக்கத்துல, பயங்கர நாற்றம் ரொம்ப நேரம் அங்க இருக்க முடியாது. எங்களுக்கு ஒரு ஐம்பது அடி தள்ளி சேலத்துக்கு ஒரு பஸ் புறப்பட தயாரா இருந்துச்சு. நாங்க ஒரு முடிவு எடுத்தோம், பஸ்ஸுக்கு எதிர்திசைல நான் ஓட ஆரம்பிக்கணும், நான் கிளம்பி 20 நொடியில ஆர்த்தி பஸ்ஸை நோக்கி ஓடணும். எனக்கு அவளை பஸ் ஏற்றிவிட வேற வழி தெரியல. நான் ஒரு தடவை சுத்தி கவனிச்சேன், எங்களை துரத்திக்கிட்டு வந்தவங்க எங்க இருக்காங்கன்னு, என்னால எவ்ளோ வேகமா முடியுமோ அவ்ளோ வேகமா ஓட ஆரம்பிச்சேன், சரியா 20 நொடில நான் ஆர்த்தி கிளம்பிட்டாளானு உறுதிப்படுத்திக்க திரும்பிபார்த்தேன், நங்ங்ங்ங்ங்ங்..

ஒரு இரும்பு தடி என் தலையை பதம் பார்த்தது.


பயங்கர இருட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் மயக்கத்தில் இருந்து தெளிந்தேன்.அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த ஒரு எக்ஸாஸ்ட் காத்தாடியின் இடைவெளியில் வந்த நிலா வெளிச்சத்துல அது ஒரு பழைய இரும்புகடை கிடங்கு மாதிரி இருந்துச்சி, சுத்தியும் காலி பாட்டில்கள். என்  ரேடியம்  வாட்ச்ல மணி 9.15னு தெளிவா தெரிஞ்சுது. என் கவலையெல்லாம் ஆர்த்தி பஸ் ஏறி இருப்பாளான்னு தான். காலையில் தலையில் ஏற்பட்ட காயம் கொஞ்சம் வலிச்சது, ரத்தம் கசிஞ்சு அது உறைஞ்சு போயிருந்துச்சு. எனக்கு என் எந்த நிலைமை, நான் எப்படி இந்த பிரச்சனைக்குள்ள வந்தேன்.

 

நான் துருவ் இஞ்சினீரிங் முடிச்சு 2 வருஷம் காத்த பறந்துடிச்சி இன்னும் ஒரு வேலை கிடைக்கலை, வார இறுதியில கேமராவும் கையுமா எங்கேயாவது கிளம்பிடுவேன். இந்த வாரம் ஊட்டியில பழைய பிரிட்டிஷ் பங்களாக்களை படம் எடுக்க வந்தேன். ஒரு டீக்கடைல விசாரிச்சதுக்கு கவர்னர் சோழா ரோடு பக்கமா போனா ஒரு பழைய பங்களா இருக்குன்னு சொன்னாங்க, நான் நினைத்ததைவிட படு பயங்கரமா இருந்துச்சு. அப்போ அந்த வழியா சுள்ளி பொறுக்கிட்டு வந்த இரண்டு பசங்க என்னை அங்கே ரொம்ப நேரம் நிற்க வேணாம்னு எச்சரிச்சாங்க, ஏன் என்று கேட்டதுக்கு பதில் சொல்லாம ஓடிட்டாங்க. ஏற்கனவே இருட்டினதால நானும் காலையில வரலாம்னு கிளம்பிட்டேன், ஒரு நூறு அடி நடந்திருப்பேன் என்னை தாண்டி ஒரு ஜீப் அந்த பிரிட்டிஷ் பங்களாக்குள்ள போச்சு. நான்கு பேர் ஒரு சின்ன பொண்ணை தூக்கிட்டு போனாங்க, நான் கொஞ்சம் மறைவா இருந்து என்ன நடக்குதுன்னு பார்த்தேன். அந்த பொண்ணை உள்ளே வைத்து தாளிட்டு, இவங்க வெளியே வந்து ஏதோ பேசிட்டுருந்தாங்க, என்னானு சரியா கேட்கல. திடீர்னு அந்த நான்கு பேர்ல ஒருத்தன்," மச்சி பத்து மணிக்கு கடை மூடிருவாங்கடா"ன்னு கத்தினான். அவர்கள் அனைவரும் ஜீப்பில் பறந்தனர். நான் இதுதான் சரியான நேரம் என அந்த பங்களாவை இரண்டு மூன்று கோணத்தில் க்ளிக்கினேன். உள்ளே போய் அரைமயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை தோளில் தூக்கி கொண்டு அவர்கள் வருவதற்கு முன் அந்த இடத்தை விட்டு போய்விடவேண்டும் என்று வேகமாக ஓடினேன். நான் கேட்டை தாண்டும் பொழுது தூரத்தில் அந்த ஜீப் என் கண்ணில் பட்டது. நாங்கள் அருகில் இருந்த ஒரு உருளை கிழங்கு லோடு லாரியில் ஒளிந்து கொண்டோம். அவர்கள் எங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை. லாரி கோவை போகிறது என்று தெரிந்துகொண்டு எங்களை கோவை பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிடுமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்டோம். நல்ல டிரைவர், எங்கள் நிலைமையை எடுத்து சொன்னதும் புரிந்து கொண்டார்.

 

அப்பொழுதுதான் அவள் சொன்னால், அவள் பெயர் ஆர்த்தி, ஏழாம் வகுப்பு, ஊர் சேலம், அப்பா அம்மா டாக்டர், பள்ளி சுற்றுலா வந்தபொழுது வழி தெரியாமல் இவர்கள் கையில் மாட்டிக்கொண்டால், பிறகு என்னை பற்றி சொல்லிவந்தேன். பஸ் ஸ்டாண்ட் வந்தடைய விடியற்காலை 4 மணி, லாரியிலிருந்து இறங்கியவுடன் நாங்கள் அந்த நான்கு பேர் கண்ணில் மாட்டிக்கொண்டோம்.  அவர்கள் எங்களை தேடி கோவை வரை வந்துள்ளனர். அதற்குப்பிறகு என்ன நடந்ததுன்னு உங்களுக்கே தெரியுமே.

 

இப்போ நான் எப்படியாவது இங்க இருந்து தப்பிக்கணும், ஆர்த்தி என்ன ஆனா தெரியணும். எனக்கு ஒரு ஐந்து அடி தள்ளி ஒரு ஒடஞ்ச பாட்டில் இருந்துச்சு, அதைவைற்று என் கட்டுகளை அறுத்தெறிந்தேன். சிறு கதவு இடுக்கு வழியாக பார்த்தேன், நான்கு பேர் இருந்தனர். நான்கு பேரை என்னால் சமாளிக்கமுடியாது. என் கைப்பேசியும் பேட்டரி இல்லாமல் செயலிழந்திருந்தது. என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது மறுபடியும் அதே குரல்,"மச்சி பத்து மணிக்கு கடை மூடிருவாங்கடா"ன்னு ஒருவன் கத்தினான்.

 

நான் வெளியே வந்து ஒரு டீ கடையில் என் கைபேசிக்கு உயிர்க்குடுத்தேன். "Anna, Reached Home Safely", ஒரு குறுஞ்செய்தி புது எண்ணிருந்து வந்திருந்தது.

 

 

 

 

 

 

 

2.  வேலை கிடைச்சாச்சு

 

ஊரே தீபாவளி கொண்டாடிட்டு இருந்துச்சு, நான் சேலம் டு பெங்களூரு பஸ்ல பயணம் பண்ணிட்டுஇருந்தேன். சென்னையில 2 வருஷம் நான் அலையாத கம்பெனி இல்லை, இப்போ பெங்களூருல ஒரு இன்டெர்வியூ. என் பேக் பக்கத்துல ஒரு சின்ன ஹேண்ட்பேக், ஏதோ ஒரு பொண்ணு மிஸ் பண்ணிருக்கணும். அந்த ஹேண்ட்பேக்ல ஒரு வண்டி சாவியும், விசிட்டிங் கார்டுகளும் இருந்துச்சு.

 

அந்த பொண்ணு பெயர் நக்ஷத்ரா, டெக்னாசாப்ட்ங்கிற கம்பெனில எச். ஆர் மேனேஜர். நக்ஷத்ரா, டெக்னாசாப்ட் ரெண்டும் எனக்கு பழக்கப்பட்ட பெயர். டெக்னாசாப்ட்ல தான் எனக்கு இன்டெர்வியூ. அப்புறம் நக்ஷத்ரா, என் காலேஜ் மேட்.  அவ மேல காலேஜ்ல ஏகபட்டப்பெறு ஒன் சைடு, அதுல நானும் ஒரு சைடு. பஸ்சில் ஓடிய ‘என்னை தாலாட்ட வருவாளா’ பாட்டும், வெளியே மெல்லிசாக தூறும் தூறலும் என்னை ஒரு சின்ன ரீவைன்ட்க்கு இழுத்து சென்றது. அவளின் முதல் அறிமுகம், சிம்பொசியம் சேலைகள், குறும்பு கலாட்டாக்கள், கடைசி நாள் கண்ணிர் இவை அனைத்தும் பட்டாம்பூச்சியின் படபடக்கும் இறகுகள் போல என் கண் முன் வந்தது. திடீரென ஒரு இடி சத்தம் என்னை நிஜத்துக்கு இழுத்து வந்தது.

 

அந்த விசிட்டிங் கார்டில் இருந்த நம்பருக்கு கால் செய்தேன், மறுமுனையில் பெண் குரல்.

 

‘’ ஹலோ, மே ஐ நோ ஹு ஸ் ஸ்பிக்கிங் ?’’

‘’ நான் துருவ், உங்க ஹேண்ட் பேக் பஸ்சில கிடைச்சது, எங்க வந்து தரட்டும்? நான் பெங்களூர் போயிக்கிட்டிருக்கேன்”

‘’ தேங்க்ஸ் துருவ், நான் 2 டேஸ்’ல பெங்களூர் வந்துருவேன், வந்ததும் இதே நம்பருக்கு கால் பண்றேன்.’’

 

நீங்க எந்த காலேஜ்னு கேட்க நினைச்சேன், ஆனா அதற்கு முன் மறுமுனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 

இரண்டு நாட்கள் கழித்து, டெக்னாசாப்ட் வாசலில் அவளுக்காக காத்திருந்தேன், காட்டன் சேலையில் அதே நக்ஷத்திரா. அவளுக்கும் என்னை பார்த்ததில் மிகவும் ஆச்சர்யம், எதிரே ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து காலேஜ் வாழ்க்கை பல நினைவுகளை அசைபோட்டோம். அவள் இன்ஜினியரிங் முடித்து MBA படித்ததாகவும், இங்கே ஒரு வருடமாக HR’அகா இருப்பதாக கூறினாள். அவளை கவனித்ததில் திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தது, அவளே அதை உறுதி படுத்தினாள்.

ஹேண்ட் பேக்கை அவளிடம் தந்துவிட்டு இன்டெர்வியூ பற்றி கூறினேன்.  அவளால் நம்பமுடியவில்லை, எனது இன்டெர்வியூ லெட்டர்'ஐ பார்த்துவிட்டு ஏதோ ஒரு நம்பருக்கு கால் செய்தாள். சிறிது நேரத்தில் ஒன்றும் கவலைப்படவேண்டாம் எல்லாம் நான் பார்த்துகிறேன் என்று தைரியம் சொன்னாள். அவள் சொல்போலவே அன்று எனக்கு வேலை கிடைத்தது.

 

 

 

 

 

No comments:

Post a Comment